பென்குயின் - ஒரு அரிசி மூட்டையைத் தூக்கி நிறுத்தி வைத்தது போல இருக்கும் வெயிட்டான பறவை. பறவையினத்தை சார்ந்த இந்த பென்குயின் பறவைகளால் பறக்கமுடியாது.
மிகவும் கடுமையான குளிர் பிரதேசங்களில் வசிக்கும் இவை மிகவும் சாதுவானவை. பனிப்பாறைகள் நிறைந்த, துருவ பகுதியில் மட்டுமே இவைகள் வாழும். ஆஸ்திரேலியா, ஆப்பிக்கா, தென் அமெரிக்கா, பெரு, நியூசிலாந்து நாடுகளின் கடற்கரைகள், தெற்கு அட்லாண்டிக், அண்டார்டிகா, பசிபிக் கடற்கரைகள்தான் பென்குயின்கள் வாழும் இடங்கள்.
பெரிய பனிப்பாறைகள் மிதக்கும் கடலில், இவைகள் குதித்து விளையாடும். தண்ணீரில் மூழ்கி மீன்களை பிடித்து சாப்பிடும். இவை நல்ல தண்ணீரைக் குடிக்காது. கடல் நீரை மட்டுமே குடிக்கும். இதன் உடலில் உள்ள ஒரு சுரப்பியின் மூலம் தண்ணீரில் உள்ள உப்பை பிரித்து தனியே வெளியேற்றிவிடும்.
பென்குயின் கடற்கரையில் உட்கார்ந்திருக்கும் போது முகமூடி போட்ட மனிதன் போல இருக்கும். இதற்கு குட்டை கழுத்து, கனத்த உடம்பு. வால் கொஞ்சம் மட்டும் உண்டு. இதன் உடல் முழுவதும் தண்ணீர் புகாத வாட்டர் புரூப் (Water Proof) சிறகுகள் உள்ளன. கடும் குளிரையும், மழையையும் சமாளிக்க மூன்று அடுக்குச் சிறகுகள் இதன் உடம்பில் இருக்கும்.
பென்குயின் உடம்பில் தினசரி 150 கிராம் சிறகுகள் வரை உதிர்ந்து விடும். ஆனால், 12 நாட்களில் புதுச்சிறகுகள் முளைத்து விடும். தன் உடலில் மொத்தம் 2 கிலோ சிறகுகளை போர்த்திக்கொண்டு, கடும் குளிரை இதமாக சமாளித்துவிடும் பென்குயின்.
இதற்கு பிடித்த உணவு கடல்மீன்கள்தான். கடலில் டைவ் அடித்து வெகு ஆழத்துக்குச் சென்று வெரைட்டியான மீன்களை ஆசை தீர துரத்திப் பிடித்து லபக், லபக்கென்று சாப்பிடும். கடலில் 200 மீட்டருக்குக் கீழ் சர்வசாதாரணமாக பென்குயின்கள் நீச்சல் அடிக்கும்.
ஐஸ் பாறைகளைக் கண்டு விட்டால், காலால் இவை நடக்காது. வயிற்றால் வழுக்கியபடி படுவேகத்தில் ஸ்கேட்டிங் செய்யும். பென்குயின்கள் நிலத்தில் எதையும் சாப்பிடாது. பிரேக்பாஸ்ட், லன்ச், டின்னர் எல்லாம் கடலில்தான். சில நேரங்களில் இரை தேடிக் கடலில் குதிக்கும் பென்குயின்கள் பல நாட்களாக கரைக்குத் திரும்பாமல் நீந்தும்.
அதிகம் நேரம் நீரிலேயே இருப்பதால் பென்குயின்கள் உடலில் சிறு அழுக்குகூட இருக்காது. எப்பொழுதும் மேக்கப் போட்ட நடிகை போல கிளாமராக இருக்கும். இந்த பிரெஷ் தோற்றத்தாலேயே அடிக்கடி காதலால் கவரப்பட்டு, நினைத்த போதெல்லாம் ஜோடி சேர்ந்து கொள்ளும். தனது காதல் மனைவியைத் தவிர பிற பென்குயின்களை ஒரு போதும் ஆண் பென்குயின் நாடுவதில்லை.
மாலை நேரம் வந்துவிட்டால் பென்குயின்களுக்கு குஷி பிறந்துவிடும். கடற்கரையில் காலார நடக்கும்போதே காதல் பிறந்துவிடும். காதலனும், காதலியும் எதிரெதிரே பார்த்தபடி நின்று கொள்ளும். நீண்ட நேர முத்த மழை நடக்கும். முத்தத்துக்குப் பின், இறக்கைகளை படபடவென்று அடித்துக் கொள்ளும். பிறகு, காதலியின் தலையை தன் சிறகுக்குள் மறைத்து இரண்டறக் கலக்கும் ஆண் பென்குயின்.
இணைவு முடியும்வரை டிரம்பெட் வாசிப்பது பேன்ற இசையை இரண்டு பென்குயின்களும் எழுப்பிக் கொண்டேயிருக்கும். அதை கேட்டு இணைவு நிகழ்வு நடக்கிறது என்று உணர்ந்து, மற்ற பென்குயின்கள் வேறு பக்கம் முகத்தைத் திரும்பிக்கொள்ளும். டிரம்பெட் இசை, இறக்கைகள் படபடவென அடிக்கும் சத்தம் இரண்டும் நின்றுவிட்டால் இணைவு முடிந்துவிட்டது என அர்த்தம்.
வயிற்றில் முட்டை உருவாகி, டெலிவரி டைம் வந்ததும், கடற்கரையில் புதர்களும் மரங்களும் மண்டிய ஏரியாவில் பெண்குயின்கள் முட்டையிடுவதற்கு கூடும். இளம் பச்சை அல்லது வெள்ளை நிற முட்டைகள் இடும்..30 முதல் 60 நாட்கள் வரை அடைகாப்பு நடக்கும். கணவனுக்கும் இதில் பங்குண்டு. இரண்டும் பாதி பாதி நாட்கள் ஷிப்ட் முறையில் அடைகாக்கும். அந்த நாட்கள் முழுவதும் அன்ன ஆகாரம் சாப்பிடாது. பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டியிருந்தால், பென்குயின் தனது பாதச் சவ்வுகளுக்கு இடையில் முட்டையை வைத்தபடி அன்ன நடை நடந்து இடம் பெயரும். பென்குயின்களை பார்க்க ஆஸ்திரேலியாவின் சிட்னி கடற்கரையில் நிறைய டூரிஸ்ட்கள் குவிகிறார்கள்.
Tamil Free E-Books Download
பொதுஅறிவு, ஆன்மீகம், ஆரோக்கியம், சிறுகதைகள், வேலை வாய்ப்புகள், பிசினஸ் முன்னேற்றம், லாபம் தரும் பணமுதலீடுகள் பற்றிய தமிழ் இ-புத்தகங்களை Download செய்ய பின்வரும் Link-ஐ Click செய்யுங்கள்.
https://pothuarivugk.blogspot.com/2020/07/ebooks.html
பொது அறிவு, ஜோக்ஸ், ஆன்மீகம், சுற்றுலா, கம்ப்யூட்டர் கோர்ஸ் (Computer Course), குட்டிக் கதைகள் பற்றிய பல தமிழ் வீடியோக்களை நாங்கள் யூடியூப்-பில் (YouTube) வெளியிட்டுள்ளோம். இந்த வீடியோக்களை YouTube-ல் காண கீழ்க்கண்ட Link-ஐ click செய்யுங்கள்.
https://pothuarivugk.blogspot.com/p/youtube.html
பொது அறிவுத் தகவல்கள் படிக்க பின்வரும் Link-ஐ click செய்யுங்கள்.
https://pothuarivugk.blogspot.com/p/general-knowledge-in-tamil-agricultural.html
சிறுகதைகள் படிக்க பின்வரும் Link-ஐ click செய்யுங்கள்.
https://pothuarivugk.blogspot.com/p/tamil-short-stories.html
ஆன்மீகம் பற்றிய தகவல்கள் படிக்க பின்வரும் Link-ஐ click செய்யுங்கள்.
https://aanmeegamindia.blogspot.com/p/all.html