பங்குச் சந்தை என்பது ஒரு பெரிய நிறுவனம் தொழில் தொடங்க தன்னுடைய சொந்த முதலீட்டோடு, பொது மக்களையும் பங்குதாரர்களாக சேர்த்துக்கொண்டு வியாபாரம் நடத்துவது ஆகும். இதில் வரும் லாபம் பங்குதாரர்களுக்கு டிவிடென்ட் (dividend) ஆக அளிக்கப்படும்.
நீங்கள் புதியதாக ஒரு தொழில் ஆரம்பிக்க நினைக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதற்கு முதலீடு தேவைப்படும் இல்லையா? அந்த முதலீடு சிறிய அளவில் இருப்பின் உங்களுடைய பணத்தையே முதலீடாக போட்டுவிடுவீர்கள்.
செய்யும் தொழில் அதிக பணமதிப்புடையாக இருப்பின், அவற்றிற்கு அதிகமான முதலீடு தேவைப்படுகிறது. அவ்வாறான சமயங்களில் உங்களுடைய சொந்தப் பணத்துடன், வேறு எங்கேனும் கடன் வாங்கி அதை செய்ய முற்படுவீர்கள். இது ஒரு வகை.
அதே தொழில் அல்லது வியாபாரம் செய்ய மிகப்பெரிய முதலீடு (பல கோடி ரூபாய் மதிப்பீட்டில்) தேவைப்படுகிறது. ஆனால் போதுமான பணம் உங்கள் கையில் இல்லை. வியாபாரத்தை தொடங்கினால் நல்ல லாபம் கிடைக்கும் என்பது உங்களுக்குத் தெரியும்.
இதுபோன்ற சமயங்களில் உதவுபவைதான் பங்குகள். நீங்கள் உங்கள் நிறுவனத்திற்கான பங்குகளை வெளியிடலாம். உதாரணமாக உங்களுடைய நிறுவனத்திற்கு தொழில் அல்லது வியாபாரம் தொடங்க ரூபாய் 2 கோடி தேவைப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம்.
இப்பொழுது நீங்கள் அதற்கான பங்குகளை வெளியிடலாம். அதாவது இரண்டு கோடி ரூபாயை இரண்டு லட்சம் பங்குகளாக பிரித்து, அவற்றை நூறு ரூபாய் முக மதிப்பாக்கி (Face Value) பொது மக்களிடம் விற்கலாம். 2 கோடி ரூபாய் / 2 லட்சம் பங்குகள் = Rs.100. அவர்கள் தங்களுடைய வசதிகளுக்கேற்ப அப்பங்குகளில் முதலீடு செய்வார்கள். அதாவது அவர்களும் நீங்கள் தொடங்கும் தொழிலில் “பங்காளிகள்” ஆகிவிடுகின்றனர்.
இவ்வாறு செய்யும்பொழுது, நிறுவனம் தொடங்கும் வியாபாரம் அல்லது தொழில் கிடைக்ககூடிய லாபத்தை பங்குதாரர்களுக்கு பிரித்துக் கொடுக்கும். இதற்கு லாப பங்கு (டிவிடெண்ட் – Dividend) என்று பெயர்.
ஒரு நிறுவனம் தொழில் அல்லது வியாபாரம் தொடங்க பொதுமக்களையும் பங்குதாரர்களாக சேர்த்துக் கொள்கிறது. தொடங்கிய வியாபாரத்தில் லாபம் அடைந்தால் அந்த லாபத்தில் அவர்களுக்குப் பங்கு உண்டு. அதே சமயம் நஷ்டம் வந்தாலும் அதிலும் அவர்களுக்கும் பங்கு உண்டு. அவ்வளவுதான்.
பங்குகள் விற்கப்படும் விதம்
இவ்வாறு மொத்த முதலீட்டை பங்குகளாக்கி, அப்பங்குகளை கணினி மூலமாகவோ, அல்லது புரோக்கர்கள் மூலமாகவோ விற்கலாம்.
இந்தியாவில் மும்பையை தலைமையிடமாக்க கொண்டு BSE Sensex இயங்குகிறது. இதில் 30 மிகப்பெரிய நிறுவனங்களின் பங்குகளின் போக்கைப் பொறுத்தே, அன்றைய பங்குச் சந்தை நிலவரத்தின் மதிப்பு கணிக்கப்படுகிறது.
சென்செக்ஸ் என்பது பங்குச் சந்தையில் பயன்படுத்தும் ஒரு முக்கியமான சொல் ஆகும். இது பங்குச் சந்தையின் குறியீடாக (Symbol of Share Market) உள்ளது. சென்செக்ஸ் என்பதின் விளக்கம் Sensitive Index என்பதின் சுருக்கம் ஆகும்.
சென்செக்ஸ் என்பது மும்பை பங்குச் சந்தையின் மிக அதிக வியாபாரம் செய்யப்பட்ட நிறுவனங்களின் பங்குகள் உள்ளிட்ட ஒரு விற்பனைக் குறியீடு.
பங்கு சந்தைகள்
1. மும்பை பங்குச் சந்தை
2. தேசிய பங்குச் சந்தை
பங்கு சந்தையில் பங்கை வாங்க, ஒரு புரோக்கர் தேவை. SBICapSecurities, ICICI Direct, Sharekhan, Kotak Securities, Zerodha போன்றவர்கள், பங்கு சந்தையில் பங்கு வாங்க, விற்க உதவும் புரோக்கர்கள். பங்கு வர்த்தக ப்ரோக்கர்கள் எந்த பங்கை வாங்கலாம் என்ற பரிந்துறைகளை தருவார்கள். ஒரு நிறுவனத்தின் பங்கை வாங்கும்போது, இது வரை அந்த நிறுவனத்தின் பங்கு விலை எவ்வாறு உயர்ந்துள்ளது, வியாபாரம், லாபம் எந்த அளவுக்கு உயர்ந்து வருகிறது, செலவுகள் எந்த அளவுக்கு குறைந்து வருகிறது, நிறுவனம் கடன் எவ்வளவு வாங்கியுள்ளது, மற்றும் மிக முக்கியமாக, எதிர்காலத்தில் எந்த அளவுக்கு நிறுவனத்தின் வியாபாரம் மற்றும் லாபம் அதிகமாக வாய்ப்புக்கள் உள்ளன போன்ற விவரங்களை துல்லியமாக தெரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு நிறுவனத்தின் பங்கு வாங்கும் பொழுது அந்த நிறுவத்தின் கடந்த கால செயல்பாடு, எதிர்கால வியாபார விஸ்தாரிப்பு வாய்ப்புகள் போன்றவற்றை ஆராய்வது அவசியம். பங்கு வாங்கும் பொழுது நமக்கு உடனடியாக (குறைந்தது 6 மாதம்) தேவைப்படாத பணத்தை முதலீடு செய்ய வேண்டும்.
நீங்கள் பங்குகள் வாங்கும் பொழுது அப்பங்குகள் உங்கள் DEMAT அக்கவுண்டில் electronic வடிவில் வரவு வைக்கப்படும்.
பங்கை விற்பவர்க்கு, பங்கிற்கான பணம் விற்பவரின் வங்கி கணக்கில் இருந்து, வாங்குபவர் கணக்கிற்கு செலுத்தப்படும். பங்கு வர்த்தகம் அனைத்தும் வங்கி கணக்கு, DEMAT account மற்றும் Trading account (இணைய தளம் வழியாக) நடைபெறும். எனவே, பங்கு சந்தையில் வர்த்தகம் செய்ய கீழ்க்கண்ட கணக்குகள் (accounts) தேவை:
DEMAT account : பணம் டெபாஸிட் செய்ய வங்கி கணக்குகள் இருப்பது போல, நாம் வாங்கிய பங்குகளை டெபாஸிட் செய்ய DEMAT account தேவை.
Bank Account (வங்கி கணக்கு): பங்கை வாங்கும் போது, வங்கி கணக்கில் இருந்து DEMAT அக்கவுண்டுக்கு பணம் செலுத்த வேண்டும். நாம் பங்குகளை விற்கும் பொழுது அதற்கான பணம், DEMAT அக்கவுண்டில் போடப்படும். அப்பணத்தை DEMAT அக்கவுண்டில் இருந்து எடுத்து நமது வங்கி கணக்கில் போடலாம்.
Trading Account (பங்கு பரிவர்த்தனை கணக்கு): பங்கு சந்தையில் இருந்து பங்கை வாங்கி, நம்முடைய DEMAT அக்கவுண்டில் டெபாஸிட் செய்ய தேவையான பங்கு வர்த்தக கணக்கு.
"பங்குச் சந்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்" என்ற இ-புத்தகத்தில் பங்குச் சந்தை பற்றிய அனைத்து தகவல்களும் உள்ளன.
இப்புத்தகத்தில் பின்வரும் தலைப்புகளில் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
Table of Contents
பங்குச் சந்தை என்றால் என்ன?
டிமேட் கணக்கு என்றால் என்ன?
சென்செக்ஸ் என்றால் என்ன?
பங்கு வர்த்தகத்தின் வகைகள்
வாரன் பஃபெட் கூறும் ஆலோசனைகள்
லாபம் தரும் பங்குகளை கண்டுபிடிப்பது எப்படி?
ஐபிஓ (IPO) என்றால் என்ன?
பங்கு சந்தையில் பயன்படுத்தப்படும் டெக்னிக்கல் வார்த்தைகள்
புள் மார்க்கெட் மற்றும் பியர் மார்க்கெட்
BSE மற்றும் NSE பங்குச்சந்தைகள்
பங்குச் சந்தையில் மிருகங்கள்
பங்குச் சந்தையில் மிகவும் கவனமாக செயல்படுங்கள்
மிட் கேப்ஸ் (Mid Caps) பங்குகள் என்றால் என்ன?
லார்ஜ் கேப்ஸ், மிட் கேப்ஸ், ஸ்மால் கேப்ஸ் பங்குகளில் சிறந்தது எது?
மல்டி பேஃகர் (Multi Bagger) பங்குகள்
பங்குச்சந்தையில் தினசரி வர்த்தகம் (Day Trading)
பணத்தைப் பெருக்க நிதி ஆலோசனைகள்
பங்கு சந்தையில் பலகோடிகள் சம்பாதித்த ராகேஷ் ஜூன் ஜூன்வாலா
பங்கு சந்தையில் செய்யக் கூடாத காரியங்கள் என்ன?
நஷ்டமான பங்கு சந்தையில் லாபம் சம்பாதித்த மாணவர்
பங்கு சந்தையில் ரூ.10 லட்சம் லாபம் ஈட்டிய மளிகைக்கடைக்காரர்
முதலீடுகள் மூலம் பணக்காரர் ஆவது எப்படி?
பங்குச் சந்தையில் இன்போசிஸ் நிறுவனத்தின் அபார வளர்ச்சி
குறைவான பணத்தில் அதிக மதிப்புள்ள பங்குகள் வாங்குவது எப்படி?
பங்குச்சந்தையில் டிரேடிங் வகைகள்
ஃப்யூச்சர்ஸ் மார்க்கெட் என்றால் என்ன?
எப்பொழுதும் வளர்ச்சி நிலையில் உள்ள பங்குகள்
ஆன்லைன் பங்கு தரகு நிறுவனங்கள்
போனஸ் பங்குகள் என்றால் என்ன ?
டெப்ட் ஈக்விட்டி ரேஷியோ என்றால் என்ன?
பங்குச் சந்தையில் டெக்னிக்கல் அனலிசிஸ்
இப்புத்தகத்தின் மொத்தப் பக்கங்கள் : 103
eBook File Format : PDF
File Size : 1 MB
Page Size : 5.5" x 11"
Price : Rs.50
This file can be viewable in Mobile, Tablet or Computer without installing any apps or software.
"பங்குச் சந்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்" இ-புத்தகத்தை Download செய்ய பின்வரும் Link-ஐ Click செய்யுங்கள்.
இப்புத்தகத்தைப் படிக்க உங்கள் மொபைல் போனில் எந்த ஒரு செயலியும் (App) install செய்ய தேவையில்லை. இதற்கான பணத்தை ஆன்லைனில் செலுத்தி, உடனே இ-புத்தகத்தை Download செய்து படிக்கலாம்.
ஆன்லைனில் எப்படி பணம் செலுத்துவது?, இ-புத்தகத்தை எப்படி download செய்வது?, இ-புத்தகத்தை எப்படி படிப்பது? என்பது பற்றிய சந்தேகங்களுக்கு பதில் தெரிந்து கொள்ள பின்வரும் Link-ஐ Click செய்யுங்கள்.